திருவையாறு என்றாலே காவிரி ஆறு மட்டுமல்லாமல் ஆண்டவர் அல்வா கடையும் நமது நினைவுக்கு வரும், ஆண்டவர் அல்வா கடையின் 50வது ஆண்டின் புதிய தயாரிப்பாக கோதுமை அல்வா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50 ஆண்டுகள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் கூறினார், கோதுமை அல்வா பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு சாரப் பருப்பு முந்திரிப்பருப்பு திராட்சை கற்கண்டு ஏலக்காய் பச்சைக் கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது மக்கள் விரும்பி இந்த கோதுமை அல்வாவை கேட்டு வாங்கி செல்கிறார்கள்,

இந்த அல்வா தஞ்சை மட்டுமல்லாது, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்றதாகும், தூர கிழக்கு நாட்டிற்குச் செல்பவர்கள், நடு கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்களும் இந்த ஆண்டவர் அல்வாவை விரும்பி வாங்கிச் செல்வார்கள்.