தஞ்சாவூர் ஜன.01 மத்திய அரசு பிறப்பித்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடியில் விவசாயிகள் புத்தாண்டு தினத்தை புறக்கணித்து கருப்பு தினமாக அனுசரித்து வயலில் பெண்கள், குழந்தைகளுடன இறங்கி போராட்டம் நடத்தினர். 

தலைநகர் டெல்லியில் கடந்த 37 நாட்களுக்கு மேலாக, குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை குடும்பம் குடும்பமாக சாலையில் அமர்ந்து கொடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி போராடி வருகின்றனர். 

கடும் குளிரிலும், மழையிலும், பனியிலும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைக்குடி விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து, ‘புத்தாண்டு தினம் எங்களுக்கு கருப்பு தினம்’ என அறிவித்து, வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர். 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வழக்குரைஞர் வெ.ஜீவகுமார், பி. முருகேசன், ஆர்.உதயகுமார், வழக்குரைஞர் சேகர், காசிநாதன், மதன், பழனி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்