தஞ்சை சூன் 11: இன்று அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் தடுப்பூசி போடப்படவில்லை என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சை மாநகராட்சியில் கோவீஷீல்டு தடுப்பூசி இருப்பு இல்லாததால் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை தடுப்பூசி போட இயலவில்லை.

கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால், தஞ்சை மேம்பாலம் அருகே இந்திய குழந்தைகள் நல சங்கம் இல்லத்தில் இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதற்கான ரசீது ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பதிவு செய்யும் போது செல்போன் எண்ணை சரியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றிய அரசின் தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவாகத் தான் ஒதுக்கப்படுகின்றது என்று, அரசும் மற்றும் ஊடகங்களும் கூறி வருகின்றன.

‍செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.