தஞ்சை மே 06: தஞ்சையில் 1250 பிராணவாயு இணைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன. கொரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்க 9 ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் தேவையான படுக்கைகள் பிராணவாயு இணைப்புடன் உள்ளதா என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையில் உள்ள பிராண வாயு கொள்கலனை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 400 நபர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தற்போது 1250 பிராணவாயு இணைப்புடன் கூடிய படுக்கைகள் உள்ளன. வரக்கூடிய நாட்களில் நோய் தொற்று அதிகமாகும் காரணத்தால் பாதிப்புகளை எதிர்கொள்ள தஞ்சை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

நோய் தொற்றை கண்டுபிடிக்க 9 ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரெம்டிசிவர் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. இந்த உயிர்காப்பு மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக புகார் வந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாதுகாப்பை கடைபிடிப்போம்!, கொரோனாவை தடுப்போம்!!,, மனிதகுலத்தை காப்போம்!!!

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.