தஞ்சை மார்ச் 31 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே குழந்தையின் சிகிச்சைக்கு பணம் தராததால் கணவன் கண் முன்னே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி மாதவி 27 இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஆண் குழந்தைகளுக்கு மஞ்சகாமாலை நோய் உள்ளதாக தெரிகிறது, சிகிச்சைக்காக கணவரிடம் மாதவி பலமுறை பணம் கேட்டுள்ளார், இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது, நேற்று முன்தினம் பணம் கேட்டபோது கணவர் தராததால் தகராறு ஏற்பட்டது, இதில் மனமுடைந்த மாதவி மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரிடம் மிரட்டியுள்ளார் இதை முருகேசன் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த மாதவி தீ வைத்துக்கொண்டார்.

இதை பார்த்த முருகேசன் பற்றி எரிந்த மனைவியை வீட்டில் இருந்து வெளியே தள்ளிவிட்டார், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மாதவியை மீது தண்ணீர் ஊற்றியும், மணலை அள்ளிக் போட்டும் தீயை அணைத்தனர், பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாதவி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.