தஞ்சை சூலை:14, தஞ்சை மதுவிலக்கு குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜூலை 16ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மூன்று நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய், உத்தரவிட்டுள்ளனர்.

தஞ்சை நீதிமன்றம் சாலையில் உள்ள பழைய ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம், 16ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது எழுத்துக்குரிய வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும், நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 16ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ரூபாய் 1000 முன் வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் இரண்டு மூன்று சக்கர வாகனத்துக்கு, ஜிஎஸ்டி 12% நான்கு சக்கர வாகனத்துக்கு ஜிஎஸ்டி, 18% சேர்த்து அன்று உடனடியாக தொகை செலுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/