தஞ்சை பிப் 22 தஞ்சை நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, வெண்ணாற்றங்கரையில் 21 பிப் 2021 பேராசிரியர் பி.விருத்தசலனார் முழு உருவ வெண்கலச் சிலைத் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற இவ்விழாவிற்கு முன்னாள் நிதித்துறை இணையமைச்சர் ச.சு பழனிமாணிக்கம் தலைமை தாங்கினார், கல்விக் காவலர் துளசி அய்யா வாண்டையார் அவர்கள் பேராசியர் பி.விருத்தசலனார் முழு உருவ சிலையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார், இவ்விழாவில் சிறப்பு மலர் முனைவர் ம.இராஜேந்திரன் முன்னாள் தமிழ்பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பழனி ஆதினம் சாது சண்முக அடிகளார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிங்காரவடிவேலு மற்றும் தஞ்சை இராமமூர்த்தி ஆகியோர் கலந்துக் ‍கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தோழர் சி.மகேந்திரன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் மோ.தமிழ்மாறன் அவர்கள் சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவிற்கு முனைவர் மு.இளமுருகன், முனைவர் இரா கலியபெருமாள், ச.அ. செளரிராசன் மற்றும் முனைவர் வி.பாரி அவர்கள் முன்னினை வகிக்க நன்றியுரை குந்தவைநாச்சியர் அரசுக்கலைக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் இரா.திராவிடராணி நிகழ்த்தினார், இவ்விழாவினை பேராசியர் பி.விருத்தசலனார் அவர்களின் மாணவர்கள், மாணவியர்கள் ஒருங்கமைத்திருந்தனர்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை.