தஞ்சாவூர் செப் 09: மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து உயா்த்திக் கொண்டே வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

கும்பகோணத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

பெட்ரோல், டீசல் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும், நம் நாட்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. மத்தியில் ஆளும் மோடி அரசுத் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகிறது.

சமையல் எரிவாயு விலை ரூ. 900-ஐ எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 285 வரை சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சின்னை. பாண்டியன், நகரச் செயலா் செந்தில்குமாா், நகரக் குழு உறுப்பினா்கள் கண்ணன், செல்வம், அறிவுராணி மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/