தஞ்சை ஏப்ரல் 30 மாவட்டம் திருவோணம் அருகே சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் படுகாயம் அடைந்தார், பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இது தொடர்பாக அனுமதியின்றி பேனர் வைக்க தடை போலீசார் கைது செய்தனர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்துள்ள அம்மானிப்பட்டு காலனி தெருவை சேந்தவர் சாமிக்கண்ணு (60) மாற்றுத்திறனாளி இவரது மனைவி விஜயராணி( 55) இருவரும் கூலித் தொழிலாளிகள் இருவர்களும் முருகானந்தி (25) சரண்யா (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கடந்த 27ஆம் தேதி விஜயராணி, தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள ஓடப்பர் கிராமத்தில் தனது உறவினர் ஒருவரது இறப்பின் 8ம் நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அழகின் விடுதியை சேர்ந்த உறவினர் பரமசிவம் ( 40) என்பவருடன் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார், மோட்டார் சைக்கிளை பரமசிவம் ஓட்டினார் விஜயராணி பின்னால் உட்கார்ந்து இருந்தார், இவர்கள் திருவோணம் கரம்பகுடி சாலையில் மேட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ,சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனர் திடீரென மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயராணி மற்றும் பரமசிவம் ஆகியோர் மீது விழுந்தது.

இதனால் விஜயராணி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு அதில் அவர் படுகாயம் அடைந்தார் இதை தொடர்ந்து படுகாயமடைந்த விஜயராணி அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இதயராணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விஜயராணி கணவர் சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் முறையான அனுமதியின்றி சாலையோரத்தில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த மேட்டுப்பட்டி சேர்ந்த ரவிச்சந்திரன் ( 44 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சாலையில் சென்ற பெண் படுகாயம் அடைந்த உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை ஓரங்களில் அனுமதியின்றி பேனர் போஸ்டர் டிஜிட்டல் தட்டிகள் | போன்றவைகள் வைக்ககூடாது என்று கோர்ட்டுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து அனுமதியின்றி பேனர் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைப்பதை தமிழக அரசு தடை செய்தது உத்தரவிட்டுள்ளது, இந்த நிலையில் இதுபோன்ற துரதிஸ்டவசமான சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கும் வகையில் இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி, அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர் மற்றும் விளம்பரத் தட்டிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று திருவோணம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.