தஞ்சை ஜனவரி 18 அகில இந்திய விவசாயிகள் போராட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீர மோகன் தலைமையில் நடைபெற்றது. 


மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி. கண்ணன், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கோ.திருநாவுக்கரசு, இரா.அருணாச்சலம், ப.அருண்சோரி, பி. செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பு குழு சாமி.நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


கூட்டத்தில், ‘போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகையில், தஞ்சையிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் சென்று பங்கேற்பது, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தேசியக்கொடிகளோடு தஞ்சையில் டிராக்டர் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 


மேலும் தமிழகத்தில் பரவலாக பெய்துள்ள கன மழையை பேரிடராக அறிவித்து பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பெயருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றார்போல் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் எனவும்,  மேலும், டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகள் 20 நபர்களுக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்காக சம்மன் அனுப்பி அச்சுறுத்துவதை வன்மையாக கண்டித்தும்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

க.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை.