தஞ்சாவூர் அக் 27: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சஞ்சய் நகர், தெற்குத் தெருவை சேர்ந்த ஆல்பர்ட் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் 50 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சூரப்பள்ளம் ஏரிக்கரை சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, தாழ்வாக சென்று கொண்டிருந்த, மின் கம்பி வைக்கோல் போரில் உரசியதால், வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. அதனைக் கண்ட டிராக்டர் டிரைவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் ஜானகிராமன், ஹரிஹரன், பாலச்சந்தர், ஆகியோர் விரைந்து செயல்பட்டு எரிந்து கொண்டிருந்த வைக்கோலை அகற்றி, டிராக்டர், டிப்பரை பத்திரமாக மீட்டனர். இதில் சில வைக்கோல் கட்டுகள் மட்டும் சாம்பலானது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/