தஞ்சை சூலை: 12, தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்கொட்டி வைக்கப்பட்டுள்ள நெடி நனைந்து வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பூதலூர் 16.8 தஞ்சை 15, அய்யம்பெட்டை 12, பட்டுக்கோட்டை 7, மஞ்சளாறு 6.2, கும்பகோணம் 4.4 திருவையாறு 4, திருக்காட்டுப்பள்ளி 3.2, ஈச்சன்விடுதி 3, திருவிடைமருதூர் 2.8 மில்லி மீட்டர் இந்த மழை காரணமாக தஞ்சாவூர் அருகே அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் சாலையோரம் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல் குவியல்கள் நனைந்து வருகிறது.

தார்பாய்கள் மூலம் மூடப்பட்டாலும் தரைவழியாக தண்ணீர் புகுந்துவிடுவதால் நெல் குவியல்கள் நனைகின்றன இதனால் பல கிலோ நெல்மணிகள் முளைத்து விடுகின்றன, என விவசாயிகள் தெரிவித்தனர் இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதால் கொள்முதல் செய்ய முடியவில்லை என நிலைய பணியாளர்கள் தெரிவித்தனர் இதையடுத்து விவசாயிகள் கொண்டு வந்த நெல், ஈரப்பதம் அளவிடும் சாதனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 22 சதவீதம் ஈரப்பதம் இருப்பது தெரியவந்தது.

அரசு விதிமுறைகளின்படி கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 வரை மட்டுமே இருக்க வேண்டும், என்றும், காயவைத்து கொண்டுவந்தால் உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விரைவாக கொள்முதல் செய்வதற்கு வசதியாகக் கூடுதலாக மற்றொரு நிலையைத்தை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்தார் அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர், உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/