தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூர் குறுவை தொகுப்புத் திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக் கப்பட்டு அதன்படி மதுக்கூரில் 290 ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுக்கூர் வட்டார வேளாண் துணை இயக்குனர் பாலசரஸ்வதி வாட்டாகுடி கிராமத்தில் நடந்த குறுவை முனைப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு ஆய்வு செய்தார்.
அங்கு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரையாற்றி மானிய விண்ணப்பங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் , குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் வழங்கிடவும் , சமச்சீ ரான உரத்தைச் சரியான நேரத்தில் அளித்திடும் பொருட்டு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா , 1 மூட்டை டிஏபி , அரை மூட்டைப் பொட்டாஸ் வழங்கிடவும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்மூலம் பட்டா சிட்டா அடங்கல் , ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகலினை பெற்றுக்கொண்டு முன்னுரிமை பதிவேட்டில் பதிந்து பரிந்துரை வழங்கிடவும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் வழங்கிடவும் இலக்கு பெறப்பட்டுள்ளது.
ஜூன் 30க்குள் நாற்று நடவு பணியை அதிகரிக்க குறுவை தொகுப்பு திட்ட உதவி மையங்கள் மதுக்கூர் , கீழக்குறிச்சி, ஆலத்தூர் , சிரமேல்குடி. வேளாண் விரிவாக்க மையங்களில் உர மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வாட்டாகுடி உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட பவர் டில்லர்களை ஆய்வு செய்து, காசாங்காடு மற்றும் மன்னாங்காடு கிராமங்களில் தென்னையில் ஊடுபயிராகக் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெற்ற பசுந்தாள் உர விதைகள் தென்னந்தோப்புகளில் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் பூமிநாதன், பாபி, அட்மா திட்ட ஐயா மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்