தஞ்சை ஏப்ரல் 28 தஞ்சை அருகே உள்ள புது பட்டியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி அவருடைய மனைவி வள்ளிநாயகி வயது (55) புண்ணியமூர்த்தி இறந்துவிட்டார் வள்ளிநாயகம் அவருடைய மகள் வனிதாமணி வயது (34) என்பவரும் தஞ்சையை அடுத்துள்ள மருங்குளத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர் இந்த பெட்டி கடை அருகே வள்ளி நாயகியின் கணவர் புண்ணியமூர்த்தி சகோதரர் புதுப்பட்டியை சேர்ந்த ஜெயராமன் வயது (50 )என்பவர் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மருங்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் (28 ),சூரியன் பட்டியை சேர்ந்த ஆனந்தபாபு (28 )ஆகிய இருவரும் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர், இவர்களை அழைத்து வருவதற்காக அவருடைய நண்பர்கள் சரவணன் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் காரில் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து வெங்கடேஷ், ஆனந்தபாபு சரவணன் ஆனந்தராஜ் ஆகிய 4 பேரும் வரும் மருங்குலத்துக்கு காரில் திரும்பினர்.

அப்போது அவர்கள் 4 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது வீட்டுக்கு செல்லும் வழியில் நான்கு பேரும் வள்ளிநாயகம் பெட்டிக்கடைக்கு காரில் சென்றனர், அப்போது வெங்கடேஷ் பெட்டிக்கடைகள் தண்ணீர் பாட்டில் வாங்க கத்தார் நாட்டு பணத்தை கொடுத்தார், இது குறித்து வள்ளிநாயகி கேட்டபோது நான்கு பேரும் வள்ளிநாயகி மற்றும் அவருடைய மகளிடம் தகராறு ஈடுபட்டனர் இதனை பார்த்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஜெயராமன் மற்றும் சிலர் அங்கு சென்ற போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மது பாட்டில்கள் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர் இதில் 4 பேர் வந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது இந்த மோதலில் படுகாயமடைந்த வெங்கடேஷ் ஆனந்தபாபு சரவணன் ஆனந்தராஜ் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராமனை கைது செய்தனர் இதேபோல் வனிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடேஷ் சரவணன் ஆனந்தபாபு மகன் தர்ஷன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் அல்லாடி வருகின்ற நிலையில் இளைஞர்கள் இது போன்று நடந்து கொள்வது மிகுந்த கவலை அ‍ளிப்பதாக உள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை