தஞ்சாவூர் ஆக 13 தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் நடைபெற்று வருகிறது நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற ஏலத்தில் 26 கடைகளை ஏலம் விடப்பட்டது ஒரே நாளில் ரூபாய் 6 கோடி வசூல் ஆனது இது மாநகராட்சி வரலாற்றில் சாதனை என்று ஆணையர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையம் பகுதிகள் ரூபாய் 28.700 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் பழைய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அதற்கு பதிலாக 93 கடைகள் கட்டப்பட்டு உள்ளது.

இந்த தடைகளுக்கு பொது ஏலம் விட மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு. நேற்று முன்தினம் பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. இதில் ஒரு பகுதி மட்டும் ஏலம் விடப்பட்ட நிலையில் ஏற்கனவே கடைகளை வைத்து நடத்திய வியாபாரிகள் தங்களுக்கு பொது ஏலத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் மாலை வரை நடைபெற்றது. அடுத்து பழைய பேருந்து நிலையத்தில் உள்ள 54 கடைகளுக்கு மற்றும் நாளை இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெறும் என கூறப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி அலுவலகம் முன்பாக டிஎஸ்பிக்கள் ரவீந்திரன் ராஜ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் ஏலம் எடுக்க விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு கடைகளுக்கும் மாத வாடகையாக ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் கேட்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏலத்தொகை வைப்புத்தொகையை 24 மணிநேரத்திற்குள் செலுத்த உறுதிமொழியும் பெறப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவில் பொதுமக்களுக்கும் ஏலம் எடுக்க வந்தவர்கள் ஒளிபரப்பப்பட்டது. இதற்கிடையில் பழைய பேருந்து நிலையத்தின் ஏற்கனவே கடைகளை நடத்தி வந்தவர்கள் உள்ளாட்சி கடை உரிமையாளர்கள் சங்கமாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் வியாபாரிகள் ஒன்று கூடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாண்டியன் கூறுகையில் இந்த ஏலத்தை ரத்து செய்யாவிட்டால் தஞ்சாவூர் மாநகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டமும் விரைவில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மொத்தம் உள்ள 54 கடைகளில் 26 கடைகள் நேற்று ஏலம் போனது மீதம் உள்ள கடைகளுக்கு என்று தொடர்ந்து ஏலம் நடைபெறும் நேற்று அதிகபட்சமாக மாணவர்களில் 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது, குறைந்தபட்ச வாடகை 50 ஏலம் போனது, நேற்று மட்டும் நடைபெற்ற ஏலத்தில் ரூபாய் ஆறு கோடி ரூபாய் வசூலானது இதே மாநகராட்சி வரலாற்றில் சாதனை என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவண குமார் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/