தஞ்சாவூர் செப்: 3-தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஈச்சங்கோட்டை அரசு வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் வேலாயுதம் கஜா புயல் தாக்குதலுக்குப் பிறகு தென்னை குருத்து பகுதியைத் தாக்கி வந்த காண்டாமிருக வண்டு மண் வழியாக ஊடுருவி தென்னைமரங்களை பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது தென்னை கன்றுகளையும், மரங்களையும், இலைகளையும், வெள்ளை சுருள் பூச்சி மற்றும் காண்டாமிருக வண்டுகள் மிகப்பெரிய அளவில் பாதித்து தென்னை குருத்துக்கள், மற்றும் மட்டைகளை கத்திரிக்கோல் வைத்து கட் செய்தது போல் வெட்டி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

மனிதன் கையாளுகிற நூதன செயல்களைப் போலவே கஜா புயலுக்கு பிறகு காண்டாமிருக வண்டுகள் தென்னையை தாக்கும் போது நூதன முறையில் குருத்துக்கள் மீது தாக்குதலை நிறுத்த மண் மூலமாகவே மரங்களில் ஏறி தென்னையை அழித்து நூதன பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அழிவிலிருந்து விவசாயிகள் தென்னையை காப்பாற்ற ஒட்டுண்ணி மூலமாகவோ நச்சுத்தன்மை இல்லாத உயிரியல் நுண்ணுயிர் மூலமாகவே தென்னையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

ஒட்டுண்ணியைப் பொறுத்தவரை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தேவையான ஒட்டுண்ணிகளை பெற்று விவசாயிகள் பயனடையலாம் நாப்தலின் மணலில் கலந்து குருத்து பகுதியில் போட்டு காண்டாமிருக வண்டுகள் வருவதைத் தவிர்க்க முடியும்.

நூதன பேரழிவை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை அழிக்க தென்னை ஆராய்ச்சி மய்ய நிர்வாகத்தை விவசாயிகள் ஆலோசிக்க வேண்டும், தென்னை தோப்புகளில் சுத்தமாக வைத்திருக்க விவசாயிகள் முயலவேண்டும்.

வேப்பம் கொட்டை போன்ற இயற்கை உரங்களை விவசாயிகள் தென்னைக்கு பயன்படுத்துவதே சாலச் சிறந்ததாகும் கஜா புயலுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களில் எதிர்பார்த்த தென்னை மகசூல் விவசாயிகள் தர முடியவில்லை என்னை ஆராய்ச்சி மற்றும் தாக்குதல் குறித்த ஆலோசனைக் விவசாயிகளுக்கு ஈச்சங்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் தரப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/