தஞ்சை மே 11: விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட தஞ்சை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை அதிகரித்து வரும் நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் 857 பேரும் நேற்று 897 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு சிறப்பு மாவட்ட அதிகாரி சுப்பையன், தஞ்சை ஆட்சியர் கோவிந்த ராவ் ஆகியோர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு தொடங்கிய நிலையில் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் எதிரிலே அமைந்துள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கூடியதோடு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் வங்கி நிர்வாகிகளும் இதனை கண்டுகொள்ளாமல் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதுபோன்று அரசு விதிகளை அரசு நிறுவனங்களை மீறுவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற இடங்களுக்கு கட்டாயமாக காவலர்களைக் கொண்டு கூட்டத்தை ஒழுங்கு செய்து மக்களுக்கு இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.