தஞ்சை ஜூலை:11-மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை தாலுகாவில் மதுக்கூர் மிக முக்கியமான பகுதியாகும் மதுக்கூர் தேர்வுநிலை பேரூராட்சி ஆக இருக்கிறது மதுக்கூர் யூனியனில் 33 ஊராட்சிகள் உள்ளன அதில் ஏராளமான கிராமங்கள் உள்ளடக்கியது இங்கு மாடி வீடுகளும் ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் உள்ளது.

கடைத் தெருக்களில் உள்ள கடைகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கடியாக அமைக்கப்பட்டுள்ளது எனவே அப்பகுதிகளில் அதிகம் தீ விபத்து ஏற்படுகிறது திடீர் திடீரென மின் கசிவினால் பொதுமக்களில் சிலர் அஜாக்கிரதையால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது இந்த தீ விபத்தினால் ஏராளமான வீடுகளும் தொழிற்சாலைகளும் கடைகளும் அவ்வப்போது எரிந்து விடுகிறது இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது

மேலும் மதுக்கூரில் தீ விபத்து ஏற்படும்போது 15 கிலோமீட்டர் தூரமுள்ள பட்டுக்கோட்டையிலிருந்தும், மன்னார்குடியில் இருந்துதான் தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்க கூடிய சூழ்நிலை உள்ளது அந்த வாகனங்கள் வருவதற்குள்ளாகவே ஏராளமான பொருட்கள் எரிந்து விடுவதும் உயிர் பலியும் ஏற்படுகிறது.

எனவே தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று மதுக்கூர் பகுதி வர்த்தகர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் மெட்ரோ சேகர், உட்பட நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் இதுவரை மதுக்கூர் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தினால் அவசர தேவைக்கு பட்டுக்கோட்டைக்கு கூட அந்த தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனவே மதுக்கூர் மக்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
http://thanjai.today/