தஞ்சை பிப் 26 போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது. தஞ்சையில் 3 பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்கவேண்டும். இடைக்கால நிவாரணமாக வெறும் 1000 ரூபாயை அறிவித்ததை கண்டிப்பதோடு மற்ற துறைகளுக்கு வழங்குவதை போல் உயர்தத்தி வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி தஞ்சையில் இன்று 2வது நாளாக போக்கவரத்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2வது நாளாக நீடிக்கிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை , ஐபமாலைபுரத்தில் உள்ள நகரகிளை, கரந்தையில் உள்ள புறநகர கிளை ஆகிய 3 கிளைகளில் போக்குவரத்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.