தஞ்சாவூர்: கொரோனா பாதிப்பை குறைக்க தஞ்சை மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 150 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதை அடுத்து பாதித்த பகுதிகளைத் தகரங்கள் வைத்து அடைக்கக்கூடிய பணி பெற்று வருகிறது. தடுப்புகள் வைக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் சிறிது சிறிதாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனைத் தவிர்க்க வேண்டுமென்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. தஞ்சை மாவட்டத்தில் 235 பேர் தற்பொழுது புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது வீட்டை அடைப்பது மூன்று நபர்களுக்கு மேல் இருந்தால் அவர்கள் வசிக்கும் தெருவை அடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்பொழுது தஞ்சை மாவட்டத்தில் 280 பேர் பாதிக்கப்பட்ட 150 இடங்கள் தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டு அவர்கள் வெளியே வராதவாறு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தாங்களாகத் தனிமைப்படுத்திக் கொண்டு வரப் பரவுவதை தடுக்க வேண்டும். எனவும் கேட்டுக் கொண்டார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today