தஞ்சை பிப். 16, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள செங்கை சமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்த கிராம மக்கள் ஒரு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது கங்கை சமுத்திரம் தெற்கு தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்கள் குடும்பம் பகுதியில் இறந்தவர்கள் உடலை கடந்த 70 ஆண்டுகளாக வயல்வெளி வழியாக தூக்கிச் சென்று அடக்கம் செய்து வருகிறோம் இதனால் வயல்வெளிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைகின்றன.

மாற்று இடத்தில் சுடுகாடு கேட்டும் கிடைக்கவில்லை எனவே எங்களுக்கு பாதை வசதி உள்ள இடத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் ஏற்கனவே உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பாதை பட்டா நிலங்கள் என்பதால் யாரும் இடம் தர முன்வரவில்லை இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் உடல்நிலை வண்டிகள் வாகனங்கள் மூலமாக உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன எனவே பூதலூர் தஞ்சை சாலை அருகே அரசு நிலத்தில் சுடுகாடு அமைக்க 5 சென்ட் கொடுத்தால் போதுமானது எனவே மாற்று இடத்தில் சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.