தஞ்சாவூர் நவ 13: பள்ளி சத்துணவு மைய பணியாளர் காலிப்பணியிட நியமனத்திற்கு ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக இருந்த 140 அமைப்பாளர், 73 சமையலர் மற்றும் 126 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க 27.09.2020 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.

அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் கொரானா நோய்த்தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில் சென்னை சமூக நல ஆணையரின் கடிதம் ந.க.எண்.10688-ச.உ.தி.1(2)-2020 நாள். 22.10.2020-ன்படி ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நாளது தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது நிர்வாக நலன்கருதி ஏற்கனவே 27.09.2020 அன்றைய பத்திரிக்கைச் செய்தியின்படி அறிவிக்கப்பட்ட பள்ளி சத்துணவு மைய பணியாளர்கள் நேரடி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது.

பள்ளி சத்துணவு மைய பணியாளர் காலிப்பணியிட நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெற பத்திரிக்கை செய்தி பின்னர் வெளியிடப்படும். அதன்படி ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மீளவும் புதிதாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/