தஞ்சாவூர் ஆக 30: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருப்பூந்துருத்தியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ரூ. 60 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 குடிசை வீடுகள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் வீட்டு மனை பட்டா, அரிசி, பழங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் 12 குடும்பங்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரத்தை வழங்கினார்.

இதில் தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழுத் தலைவர் அரசபாகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் நாகராஜன், ஒன்றியச் செயலாளர்கள் கௌதமன், சிவசங்கரன், மாவட்ட அவைத்தலைவர் தண்டபாணி, பேரூர் செயலர் அகமது, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நந்தினி, ஜான்கென்னடி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஊராட்சித் தலைவர் காயத்ரி ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/