தஞ்சாவூர் நவ 06 : நடப்பாண்டு நடந்த நீட் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 48 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 1ம் தேதி இரவு அறிவிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 48 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 44 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமி 720 மதிப்பெண்களுக்கு 268 மதிப்பெண்களும், ஒரத்தநாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி காருண்யா 232 மதிப்பெண்களும், தஞ்சாவூர் அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி அனுசுயா 221 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய 396 பேரில் 48 மாணவ, மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய 104 பேரில் 44 மாணவ. மாணவிகளின் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து நீட் தேர்வு எழுதிய வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி 720 மதிப்பெண்களுக்கு 394 மதிப்பெண்களும், தாமரங்கோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவி தரணிகா 393 மதிப்பெண்களும், மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அஸ்வின் 269 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 13 பேர் எம்.பி.பி.எஸ்., மற்றும் பிடிஎஸ்., மருத்துவபடிப்பில் சேர்ந்துள்ளனர் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனுபவமிக்க 31 ஆசிரியர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு இணைய வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே பெற்ற மதிப்பெண்களால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைப்பது என்பதற்கு வாய்ப்பில்லை மேலும் நீட் தேர்வில் குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் என்பது BCக்கு 108 என்பதும் பொது பட்டியலுக்கு 138 என்பது ஆகும் ஆனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மருத்துவ இடம் கிடைக்காது என்பது தான் உண்மை.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/