தஞ்சை ஜூன் 25 திருமண நாளில் மாப்பிள்ளை எஸ்கேப் ஆனதால் திருமணம் பாதியில் நின்றது மாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.
தஞ்சை விளார் சாலையில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் காலை மணமக்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைவான பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் உள்ளிட்டோருக்கு பெண் வீட்டார் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருமணம் நடைபெற வேண்டிய நேற்று முன்தினம் கோயிலுக்கு மணமகன் வராததால் திருமணம் பாதியில் நின்று போனது. இதுதொடர்பாக மணப்பெண் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது.
எனக்கும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் என்ஜினியர் ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன் நடந்த நிச்சயதார்த்தத்தின் போது 37 பவுன் நகை சீர்வரிசை மற்றும் கார் வாங்குவதற்காக ரூபாய் 5 லட்சம் தருவதாக பேசப்பட்டது. இதில் கார் வாங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு மாப்பிள்ளை அவரது குடும்பத்தினர் கார் வாங்குவதற்கான பணம் ரூபாய் ஐந்து லட்சத்தை உடனே தந்தால் தான் காலையில் திருமணம் நடைபெறும் என மிரட்டினர்.
தனது பெற்றோர் திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள் பணத்தை தந்து விடுவதாக கூறியும் அவர்கள் கேட்கவில்லை. மறுநாள் 23ஆம் தேதி திருமணத்துக்கு மாப்பிள்ளை வரவில்லை இதனால் எங்களது குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளனர் திருமணத்திற்காக வேண்டி செலவு செய்த தொகை ரூபாய் 10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தார் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை