தஞ்சாவூர் மார்ச்: 2-முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளராகவும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பல்வேறு கலை இலக்கிய பொறுப்புகளிலும் மிக சிறப்பாக பணியாற்றி தனது இறுதி மூச்சு வரை கொள்கை பிடிப்போடு வாழ்ந்து மறைந்த தா பாண்டியன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் கீழ ராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாயிலில் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில் இன்று காலை 10மணிக்கு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பாண்டியன் திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி

செலுத்தி உரையாற்றுகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பா மிகுந்த ஆளுமை மிக்கவர், கொள்கை பிடிப்போடு இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர். ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பல்வேறு இயக்கங்களை இதில் கொண்டு வந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு வழிவகுத்தவர். கலை இலக்கியம் பண்பாடு என்ற அனைத்து தளங்களிலும் பேராற்றலுடன் செயல்பட்டவர்.

கம்யூனிஸ்ட் களின் ஒற்றுமைக்காக தொடர் முயற்சி கொண்டவர் பொதுவுடமை இயக்கங்கள்,திராவிட இயக்கங்கள்,தலித் அமைப்புகள்,தமிழ் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.சிறந்த எழுத்தாளர்,ஆற்றல்மிகு பேச்சாளர் தமிழ்ப் புலமைக்கு ஈடாக ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர், உலக அரசியலில் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் உடனுக்குடன் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் என்று நினைவு கூர்ந்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் மாவட்ட குழு உறுப்பினர்கள் தி.கோவிந்தராஜன், வெ.சேவையா, கே.கல்யாணி ,ஒன்றிய பொறுப்பாளர் ராமலிங்கம் ,மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் ஆர். தில்லைவனம், துரை.மதிவாணன், பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/