தஞ்சாவூர் ஆக 22: சென்னை: பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த் தொற்றின் பரவலின் தன்மை, பக்கத்து மாநிலங்களில் நோய்த் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் அடிப்படையில், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/