தஞ்சாவூர் ஆக 13: பட்டுக்கோட்டை: மாற்றுத் திறனாளிகளின் நலனில் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் நல முகாம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக்குமாா் (பேராவூரணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமுக்கு தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகள் நலனில் தமிழக அரசு பெரிதும் அக்கறை காட்டி வருகிறது. அரசு அறிவுறுத்தலின்படியே இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த 5 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முகாமில் விண்ணப்பித்த 200 பேரில் 25 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நல முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சுவாமிநாதன், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளன் மற்றும் மனநல மருத்துவா்கள், எலும்பு முறிவு பிரிவு, காது-மூக்கு-தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/