தஞ்சை பிப் 13. தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற மாணவ மாணவிகளுக்கான தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில் ஐடிஐ டிப்ளமோ பட்டதாரிகள் நர்சிங் மற்றும் பி ஏ படித்த இளைஞர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் முகாமில் சுமார் 125 க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர்களால் நேர்காணல் நடத்தப்பட்டது இதில் சுமார் 629 க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 13 மாற்று திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்த ராவ் வழங்கினார்.

இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட நபர்கள் இரண்டாம் கட்டம் தேர்விற்கும் சுமார் 300 நபர்கள் திறன் பயிற்சி தேர்வுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ரமேஷ் குமார், புனிதா கணேசன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் (தொ.வ) பழனிவேல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் கதிரேசன் உதவி திட்ட அலுவலர்கள் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.