தஞ்சாவூர் ஆக :28 – தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வாசல் கிராம மக்கள் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கிராமத்துக்குள் வந்த பேருந்துக்கு கிராமமே திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பேராவூரணி அருகே உள்ள குணவாசல் கிராமத்தினர் புதுக்கோட்டை செல்வதற்கு பேராவூரணி வந்தும் திருச்சிற்றம்பலம் செல்லும் பேருந்தில் செல்லும் நிலை இருந்தது. இதனால் பெண்கள் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தை குணவாசல் பிரிவு சாலையில் இருந்து கிராமத்திற்குள் திருபுனவாசல், கொல்லைமேடு, வலசக்காடு, துறவிக் காடு வழியாக புதுக்கோட்டை கிடைக்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து நிறைவேற்றப்படவில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் இடம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை போக்குவரத்து அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நடவடிக்கையின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டுக்கோட்டையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் போதும், புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் புனவாசல் கிராமத்தில் இருந்து வந்து செல்ல உத்தரவிடப்பட்டு.

நேற்று முதல் கிராமத்திற்குள் பேருந்து வந்தது, கிராமத்திற்குள் வந்த பேருந்துக்கு கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து ஓட்டுநர் நடத்துனரை உறுப்பினர் மேலும் 20 ஆண்டுகால கோரிக்கையை ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதத்திற்குள் நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்எல்ஏ அசோக் குமார் ஆகியோருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/