தஞ்சாவூர், ஜன.29 மாணவி லாவண்யா மரணத்தை பூதாகரமாக்க பா.ஜ.க. முயற்சி செய்தால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிமாநில செயலாளர் பாலகிருஷ் ணன் கூறினார்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவி மரணத்தில் சர்ச்சை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளியில் படித்து வந்த லாவண்யா தற்கொலைசெய்தது வருத்தமும், வேதனையும் அளிக்கக்கூடிய செய்தி. லாவண்யா மரணம் தொடர்பாக பல சர்ச்சையான கருத்துக்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன.

“மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளி 163 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் படித்து நல்ல நிலையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை. எளிய மாணவர்களுக்கு தான் இந்த பள்ளி நிர்வாகம் கல்வி” கொடுக்கிறது. அவர்களை விடுதியில் தங்க வைத்து பராமரித்து வருகிறது.

மாணவியின் தற்கொலை புரியாத புதிராக இருக்கிறது. விடுதி வார்டன் சகாயமேரி தான் லாவண்யாவை தனது குழந்தை போல் பாவித்து பராமரித்து வந்துள்ளார். விஷம் குடித்து 11 நாட்கள் கழித்து மாணவி இறந்து இருக்கிறார். வீட்டில் கூட பிரச்சினை இருந்ததாக இதை நம்ப வும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும். முடியவில்லை.

எல்லா மதத்தினரும் படிக்கும் அந்த பள்ளியில் இந்த மாணவியை மட்டும் மதமாற்ற முயற்சி செய்ததாக கூறுவதை ஏற்க முடிய வில்லை. மதமாற்றம் நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அந்த மாணவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் ஒரு இடத்தில் கூட மதமாற்றம் பற்றிய கருத்து இடம் பெறவில்லை.

நடக்காத ஒரு சம்பவத்தை, உண்மைக்கு மாறான செய் தியை இட்டுக்கட்டி மதமாற் றம் நடந்தது போன்று தமிழ கத்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்படுகிறது.
புனிதமான கல்வி பணி யின் மீது திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தேசத்தில் மிகப்பெரிய பிரச்சினை ஏற் பட்டது போன்று இந்த சம்ப வத்தை மாற்ற தேசிய பா.ஜ.க. தலைமை முயற்சி செய்கிறது.

மாணவி தற்கொலை குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை தேசிய பா.ஜ.க நியமித்து இருக்கிறது. அமைதியான தமிழகத்தில் மதபதற்றத்தையும், மத மோத லையும் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

மதமாற்றம் என்ற புகாரை தமிழக அரசு நிராகரிப்பது மட்டுமின்றி அமைதியாக இருக்கும் தமிழகத்தை சீரழிக் கும் பா.ஜ.க. முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பாரபட்சமற்ற விசாரணை தேவைப்பட்டால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாயிட மலை மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. முயற்சிக்கு தமிழக மக்கள் செவிசாய்க்கக்கூ டாது இந்த பிரச்சினையில் அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜ.க. செயல்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கு பே குடும்ப பிரச்சினை காரண * இருக்கலாம் என புகார் மாக எழுந்துள்ளதால் பெற்றோ ரையும் விசாரிக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகம், கிராமமக் கள் என அனைவரிடம் பார பட்சமின்றி விசாரணை செய்து உண்மைநிலவரத்தை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும். பாரபட்சமற்ற விசாரணைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.. இந்த பிரச்சினையை பா.ஐ.க. பூதாகரமாக்க முயற்சி செய்தால் தமிழகம் முழுவ தும் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

மைக்கேல்பட்டிக்கு சென்று பள்ளி ஆசிரியர்களை வெளியே வரவழைத்து பேசினோம். அவர்களுக்கு ஆதரவு கொடுத்ததுடன் நியாயத்தின் பக்கம் தமிழகம் நிற்கும் என்று தெரிவித்தோம். இந்த பள்ளி யில் மதமாற்றம் நடந்ததாக யாரும் எங்களிடம் சொல்ல வில்லை. மாணவியின் வீடி யோவில் நம்பகத்தன்மை இல்லை. உண்மை தன்மை குறித்து விசாரிக்கவேண்டும்.

பா.ஜ.க.வினால் தமிழகத் தில் கால் ஊன்ற முடிய வில்லை. இதனால் தமிழகத் தில் அமைதியற்ற சூழலை உருவாக்க தேசிய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. மைக்கேல் பட்டி கிராமமக்கள் விருப் பாதபோது பா.ஜ.க. குழு அங்கே செல்ல என்ன அதிகாரம் இருக்கிறது?. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சின்னதுரை எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/