தஞ்சாவூர்: தொடர் மழை, பண்டிகை நேரம் போன்ற சூழ்நிலையிலும் வல்லம் வட்டாரத்தில் மருத்துவ அலுவலர்கள் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் வழிகாட்டுதலில் தஞ்சை அருகே வல்லம் வட்டாரத்தில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் ரமேஷ்குமார் வழிகாட்டுதலில், வல்லம் வட்டாரத்தில் நேற்று 60 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், ஒன்றியக்குழு தலைவர் வைஜெயந்திமாலாகேசவன், துணை தலைவர் அருளானந்து, பேரூராட்சி செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து முகாம் வெற்றிபெற பணியாற்றினர்.

முகாமிற்கு பேரூராட்சி பணியாளர்கள், உள்ளாட்சி துறை, வருவாய் துறை, கல்வித்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு நல்கினர். தடுப்பூசி முகாம்களில் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரத்திற்கும் 4000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள்,ஊரக உள்ளாட்சி,வருவாய் துறை, அங்கன்வாடி, தன்னார்வலர்கள் ஒத்துழைப்போடு நடந்தது. தொடர்ந்து பெய்த மழை, தீபாவளி பண்டிகை போன்ற நேரத்திலும் நேற்று 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி வல்லம் வட்டாரத்தில் சாதனை செய்தனர்.

நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/