தஞ்சாவூர் ஆக 01: தஞ்சை பெரிய கோவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது. பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை பெரிய கோவிலுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நேற்று மட்டும் 124 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை பெரிய கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களை இன்று முதல் 3 நாட்களுக்கு மூட உத்தரவிட்டார்.

இதையடுத்து தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் மக்கள் பெரிய கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் ஆடிப்பெருக்கு விழா மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகள் படித்துறைகளில் மூன்றாம் தேதி பொதுமக்கள் வரக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/