தஞ்சாவூர் ஆக :26- தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஊராட்சி வலசக்காடு கிராமத்தில் இந்திய தலைமை அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தினை ஆட்சியர் பார்வையிட்டார்.

இத்திட்டம் ரூபாய் 25 .40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியினை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 .07 லட்சம் மதிப்பிற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி பழுதுபார்த்தல் பணியினையும் திருச்சிற்றம்பலம் ஊராட்சி வளச்சேரிக்காடு கிராமத்தில் ரூபாய் 14.08 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்பொருள் அங்காடி கட்டிட கட்டுமான பணியினையும் பார்வையிட்டார்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 8. 68 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.81 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குதல் பணியினையும் மேலக்காடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 10 .15 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட கட்டுமான பணியினையும் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சிதுறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது,மேற்கண்ட வளர்ச்சித் திட்ட பணிகளை தரமாகவும் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி குமாரவடிவேல் ஒன்றிய உதவி பொறியாளர் சிவகுமார் திருச்சிற்றம்பலம் ஊராட்சிமன்றத் தலைவர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/