தஞ்சாவூர் ஆகஸ்ட் : 16 நலவாரிய குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்று சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் 11 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் விற்பனையில் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; கட்டுமான முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். கல்வி திருமணம் மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட பணம் பயன்களை இரட்டிப்பாக்க உயர்த்தி வழங்க வேண்டும்.

ரூபாய் 2 லட்சம் விபத்து மரணம் ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் பெண்களுக்கு 50 வயது ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய கோளாறுகளை சரிசெய்ய வேண்டும் நலவாரிய கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ் கேட்பதை கைவிட வேண்டும்.

நலவாரிய பதிவிற்கு பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் மாட்டுவண்டி மணல் குவாரியை திறந்து மணல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிஐடியு மாவட்டச்செயலாளர் ஜெயபால் ,தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் கண்ணன், துணை செயலாளர் அன்பு ஒரே சங்க மாவட்ட செயலாளர் போர் நிதி ஆள்வார் வீட்டு வேலை சங்க செயலாளர் பிரியாணி போக்குவரத்துக் கழக கிளை தலைவர் செங்குட்டுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/