தஞ்சை, நவ.12- டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பாார்வையிடுவதற்காக முதல்வர் அறிவித்த அமைச்சர்கள் குழு நாளை தஞ்சையில் கூட உள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இந்த குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையினால் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் குடிசை மற்றும் ஓடு வீடுகள் பாதிக்கப்பட்ட 309 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று முதியோர் ஓய்வூதியதொகை 25 பேருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் குறைகளை தெரிவித்தால் அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பாார்வையிடுவதற்கான முதல்-அமைச்சர் அறிவித்த அமைச்சர்கள் குழு இன்று தஞ்சையில் கூட உள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இந்த குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/