தஞ்சாவூர் நவ: 14- தஞ்சை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை இரவில் பார்வையிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாலை 4 மணிக்கு ஆய்வு செய்வதாக இருந்தது, ஆனால் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டவர் தஞ்சைக்கு வருவதற்கு இரவு 7 மணி ஆகி விட்டது அப்போது நன்றாக இருட்டி விட்டதால் இரவிலும் அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

இதற்காக அந்த பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியில் மு. க , ஸ்டாலின் பார்வையிட்டார், முதலமைச்சரிடம் பாதிப்புகள் குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்துக் கூறினார்.

பின்னர் விவசாயிகளிடமும் மு .க . ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் முன்னதாக தஞ்சை மாவட்டத்துக்கு வந்த முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் அவருக்கு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிகாரி விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர்-

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே என் நேரு, ஐ பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி. டி.ஆர்.பாலு, எம்.பி. எஸ். எஸ்.பழனி மாணிக்கம், | அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்எல்ஏக்கள் , திருவையாறு துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், தஞ்சாவூர் நீலமேகம், புதுக்கோட்டை டாக்டர் முத்துராஜா, திமுக மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், ஏனாதி பாலு, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா,ஸ்ரீகாந்த், அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் கனிமொழி உதவி பொறியாளர் திருவள்ளுவன் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தஞ்சை பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/