தஞ்சாவூர் ஆக 28: தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தில் சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தார்.

தஞ்சையில் மிக முக்கிய பகுதியாக சாந்தபிள்ளை கேட் விளங்குகிறது. இங்குள்ள பாலத்தில் வண்டிக்காரத் தெருவுக்கு நுழையும் பகுதியில் பக்கவாட்டுச் சுவரில் கடந்த புதன்கிழமை மதியம் சுமாா் 2 அடி நீளத்துக்கு சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடா்ந்து, இப்பாலத்தில் பக்கவாட்டுச் சுவரில் சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், இதை சீா் செய்யுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடர்ந்து திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக் காட்டூா், குலசேகரநல்லூா், அத்திப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

அப்போது, உங்கள் தொகுதியில் முதல்வா் சிறப்புத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/