தஞ்சாவூர் ஆக 8 தஞ்சாவூர் பாஜக சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு நாடகம் ஆகும் என்று பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் தமிழ்நாடு அரசு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது விவசாயிகள் வரவேற்கிறோம்.

இந்த நிதிநிலை அறிக்கையில் நீர்ப்பாசனம் கூட்டுறவு வேளாண்மை ஆகிய துறை சார்ந்த திட்டங்கள் இடம்பெற உள்ளது. தற்போது காவிரி பிரச்சனை தீவிரமாகி வருகிறது மேட்டூர் அணையில் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது இந்த தண்ணீரை வைத்துக் கொண்டு தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குருவைப் உயிரையும் காப்பாற்ற முடியாது.

பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய தொடங்கியுள்ளது கர்நாடகாவில் அணைகள் அனைத்தும் நிறைந்துள்ளது எனவே ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க உடனடியாக அது கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தஞ்சாவூரில் நடந்த ஐந்தாம் தேதி பாஜக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒரு நாடகமாக கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்துவதை விட ஒன்றிய அரசை கண்டித்து தான் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

பாஜக போராட்டத்தில் தமிழக அரசியல் கட்சியினரையும் விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி அரசியல் உணர்ச்சியில்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார் இதை தமிழக விவசாயிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை கர்நாடகாவிலிருந்து வேலையை விட்டு வரச்சொல்லி தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிரான சதியை ஏற்படுத்தியுள்ளார். இதில் மிகப் பெரிய சதித் திட்டம் உள்ளது. தஞ்சாவூரில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் கர்நாடகாவில் விவசாயிகள் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை துவங்கியுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/