தஞ்சை மே 23, பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தஞ்சை மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் சாதாரணமாக தலை சத்து உரங்களை பயிர்களுக்கு அதிகமாக கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவர். மூன்று போகம் நெல் சாகுபடி என்ற நிலையில் தற்போது டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

ஒரு போகத்தில் ஒரு ஏக்கரில் இருந்து சுமார் 1,000 முதல் 1,500 கிலோ தானிய மகசூலும் 2,000 கிலோ வரை வைக்கோலும் கிடைக்கிறது. மொத்தமாக மூவாயிரம், 3500 எடை உள்ள விளை பொருட்களை வெளியே அளிக்கிறது.

ஆனால் நாம் அந்த அளவிற்கு மண்ணிற்கு திரும்ப அளிப்பதில்லை பழைய சாகுபடி முறைகளில் ஏராளமாக சாண எரு, இலை தலை உரங்கள் ஆடு மாடு கிடை கட்டுதல் இவற்றின் மூலமாக மண்ணிலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் மீண்டும் மண்ணிற்கே அளிக்கப்பட்டன, ஆனால் தற்போதைய காலகட்டத்தில் போதுமான இயற்கை எருக்கள் கிடைக்கவில்லை.

விவசாயிகளும் அவசர சாகுபடி முறைகளும் மாறிவிட்டன தற்போது குறைந்த செலவில் குறுகிய காலகட்டத்தில் மண்ணை வளப்படுத்தி அடுத்த போக சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்திடவும் நாற்றங்கால் நடவு வயல்களில் இயற்கை வளத்தைச் செறிவூட்டவும் வரமாக கிடைத்தது தான், தான் அசோஸ்பைரில்லம் என்ற உரம்,அது வேலை செய்யும் இதமானது பயிர் வளரும் போது அதன் வேருடன் வளர்ந்து பல்வேறு வளர்ச்சி ஊக்கி ஹார்மோன்களை வேறு க்கு பக்கத்தில் தயாரித்து அளிக்கிறது.

காற்றில் இருந்து நைட்ரஜன் (தலைச்சத்து) வாயுவை கிரகித்து வேர்களுக்கு அளிப்பதால் பயிர் வளர்ச்சி, வேர் வளர்ச்சி அதிகரிக்கிறது வரட்சி, பூச்சி நோய், ஆகியவற்றிற்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது 30 – 40 சதம் மகசூல் அதிகரிக்கிறது இவ்வளவு நன்மைகள் உள்ள அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை எவ்வகையினாவது மண்ணில் சேர்த்து அதிக நீடித்த மகசூல் பெற வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.