தஞ்சாவூர் ஆக: 11- ஊழல் செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என்று தஞ்சையில் கி வீரமணி கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது, கொரோனா தொற்று மூன்றாவது அலை வருவதாக சொல்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் இன்னும் பல இடங்களில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் முக கவசம் அணியாமல் காணப்படுகின்றனர்.

எனவே இதனை மக்கள் இயக்கமாக மாற்றி கொரோனாவை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் மூன்றாவது அலையை தடுக்கமுடியும்.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கும் வழி காட்டக் கூடிய வகையில் தமிழகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அடுத்து வரக்கூடிய பட்ஜெட்டுக்கு இது ஒரு முன்னோடியாகவும், தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள அரசு ஒரு வெளிப்படைத் தன்மையோடு எதையும் மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளதை காட்டுகிறது. குறிப்பாக வெள்ளை அறிக்கையில் முடிவுரை பகுதி தெளிவாக உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் நடந்த தவறுகள் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்ட செலவுகள் போன்றவை இனி எக்காலத்திலும் திரும்பி வரக்கூடாது. என இந்தியாவிற்கு வழி காட்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஐந்து ஆண்டு காலத்தில் இதை நாங்கள் ஒழுங்கு படுத்துவோம் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய வகையில் தமிழகத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்பது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு. மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாழும் என்பது போல கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே அதன் செயல்பாடு உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை இடுவது என்பது பழிவாங்கும் செயல் அல்ல அவை ஆதாரங்களோடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ஒரு முன்னாள் அமைச்சரின் மகன் ஹெலிகாப்டரே வைத்துள்ளதாக செய்திகள் வருகிறது.

ஊழலில் ஈடுபட்ட எந்த அமைச்சராக இருந்தாலும் சோதனையிடுவது என்பது போதாது அதற்காக தனி நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை நடத்தி உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்.

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார், ஒரு பொறுப்பான கட்சியின் தலைவராக இன்னும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை அவர் பேச்சுக்களில் இருந்து தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்பது வரவேற்கத்தக்கது இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/