தஞ்சாவூர் செப் 17: தஞ்சாவூர் செப்டம்பர் 17 தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லை, 1879யில் ஈ‍ரோடு மாநகரத்தில் தோன்றியவர். சமூக நீதியே தனது தலையாயப்பணியாக அற்றியவர்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களின் முன்னேற்றம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மு‍ன்னேறியிருப்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

பெண் விடுதலைக்காக களத்தில் இருந்து பங்காற்றிய ஒரேத்தலைவர் பெரியார் ஒருவர் தான் அதனாலே பெண்களாலேயே அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இன்றைய அறிவியலாளர்கள், சமூக சிந்தனையாளர்களின் கணிப்புகளை அவர் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னறே சிந்தித்தவர்.

மனிதர்களில் ஏற்றத்தாழ்வுக் கூடாதென்று தனது இறுதி மூச்சு வரை தொண்டாற்றியவர் அவரது பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படுமென தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஒரு மனதாக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் முன் மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சமூக நீதி நாளில் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சமூக நீதி உறுது மொழி எடுக்கப்படுமெனவும் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

செய்தி ம.செந்தில்குமார் நிருபர்.
http://thanjai.today/