தஞ்சை பிப்.9 தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா காலத்தில் இணையதளம் வழியாக நடைபெற்று வந்தது. ஓர் ஆண்டுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன் 2110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ததை வரவேற்கும் விதமாக விவசாயிகள் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே வேளையில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு துண்டு அணிந்து வந்து வெளிநடப்பு செய்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.