தஞ்சாவூர் அக 16: தஞ்சாவூா் – விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என்று கும்பகோணத்தில் நடந்த தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இச்சங்கத்தின் 58-வது ஆண்டு இறுதி பொதுப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பயணிகள் பயன்பாடு, பயணச்சீட்டு வருவாய், வரலாறு, ஆன்மிகம், கலாசாரம், கல்வி முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை வழியான தஞ்சாவூா் – விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழிப் பாதையாக மாற்ற ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு சங்க மூத்த உறுப்பினா் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலா் கிரி, பொருளாளா் மாறன், இணைச்செயலா்கள் பாபநாசம் சரவணன், சுப்ரமணியன், நடராஜ் குமாா், நரேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/