தஞ்சாவூர், செப்.28, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட நாள் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்றது, தலைவர் கோ. மருது பாண்டியன் தலைமையில் விழா நடைபெற்றது.

மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனைவர் மா. விஜயா மற்றும் துணை முதல்வர் முனைவர் ரா. ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இளைஞர் மேம்பாடு மற்றும் படிப்பு மையம் குழு தலைவருமான எம். ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது அன்றைய தினம் நாட்டு நலப்பணித்திட்ட விழாவும் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட (அலகு 1) அலுவலர் முனைவர் என் .சந்தோஷ்குமார் வரவேற்புரையாற்றினார். நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட (அலகு 11) அலுவலர் முனைவர் கி.துர்காதேவி நன்றியுரை ஆற்றினார் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக கல்லூரியின் மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/