தஞ்சாவூர் ஆக 11: சென்னை: தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் விருதும், ரூ.25 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று அதற்கான விருதும், பரிசுத் தொகையும் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும், நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பாராட்டி நகர்புற வளர்ச்சி துறை சார்பில், முதல்வர் ஸ்டாலின் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் ரூ.25 லட்சத்துக்கான பரிசுத் தொகைக்கான காசோலை வழங்க உள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/