தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அணைத்து வார்டுகளிலும் டிசம்பர் 28 மற்றும் 29 திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் குடி நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

எனவே 28 மற்றும் 29 திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பொதுமக்கள் தண்ணீரினை சேமித்து இரண்டு நாட்களுக்கு மிகச் சிக்கனமாக பயன்படுத்து மாறு தஞ்சை மாநகராட்சி ஆணையர் வேண்டியுள்ளார்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம், சீனிவாசபுரம், சேவப்ப நாயகன் வாரி, பிரதாப சிம்ம புரம், இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுடன் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட இரண்டு நாட்களும் குடிநீர் வினியோகம் இருக்காது.

செய்தி : ம.செந்தில்குமார்.