தஞ்சை தொடர் வண்டி நிலையத்தின் வரவேற்பு பகுதியின் மேற்கூறை விழுந்தது, தஞ்சை தொடர் வண்டி நிலைய வரவேற்பு பகுதியின் மய்யத்தில் நான்கு தூண்களுக்கிடையே உள்ள மேற்கூறை என்பது பொய்க் கூறையாகும்(False Ceiling),இந்த பொய்க்கூறை தொடர் மழையின் காரணமாக விழுந்துள்ளது.
தொடர் மழை தஞ்சையில் பெய்து வருவதால் நீர்க்கசிவின் காரணமாக சிப்சத்தால் ஆன கூறை நனைந்து விழுந்துள்ளது, இதனால் ஒரு பெண்ணுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
சரிந்து விழுந்தது பொய்க்கூறை என்பதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, இதுவே சிமெண்ட் கூறையாக இருந்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.