மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக,   தஞ்சை ஜன:5, தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரிச் சாலை உதவிச் செயற் பொறியாளா் எஸ். பஞ்சநாதன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிச் சாலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் நாஞ்சிக்கோட்டை, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகா், எலீசா நகா், நூற்பாலை, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையாா்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைச்சமுத்திரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.