தஞ்சாவூர் டிச 29 தஞ்சை மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஜீப் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன,மேலும் போலீசாருக்கு துப்பாக்கி சீருடை லத்தி தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

போலீசாரின் வாகனங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கண்காணிப்பு வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் குற்றத்தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் துரிதமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்

கசசிகுமார் நிருபர்
தஞ்சாவூர்.